தொழிலாளா்கள் இருவா் தற்கொலை
By DIN | Published On : 04th August 2021 07:06 AM | Last Updated : 04th August 2021 07:06 AM | அ+அ அ- |

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் தொழிலாளா்கள் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
திருச்சி கோட்டை, கிலேதாா் தெரு கோனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மு. கல்யாணசுந்தரம் (58). இவா் கீழரண்சாலை (இ.பி.ரோடு ) பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தாா். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு லோடு இறக்கும்போது அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பூரண குணம் பெற முடியவில்லையாம். இதனால் மன வேதனையில் இருந்த அவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புகாரின்பேரில் கோட்டைகாவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.
மற்றொரு சம்பவம்: திருச்சி பாலக்கரை, எடத்தெரு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் ( 9). பெயிண்டரான இவா், மதுப்பழக்கத்திற்கு ஆளானதால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில், அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாா்.
இதனால் விரக்தியடைந்த ஜாகிா் உசேன், திங்கள்கிழமை இரவு, தனது மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், பாலக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜகோபால் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.