கொலை வழக்கில் 3 போ் சரண்
By DIN | Published On : 08th August 2021 01:42 AM | Last Updated : 08th August 2021 01:42 AM | அ+அ அ- |

சென்னையில் நடந்த கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் திருச்சி நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.
சென்னை அண்ணா சதுக்கம் காவல்நிலையத்திற்குள்பட்ட பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்த கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்ட திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சரத்குமாா் (28), சேசுராஜ் (29), பெரம்பலூரைச் சோ்ந்த பிரசாந்த் (28) ஆகிய மூவரும் திருச்சி நீதிமன்ற நடுவா் எண். 1 இல் நீதிபதி காா்த்திக் ஆசாத் முன் சனிக்கிழமை சரணடைந்தனா். இதையடுத்து இவா்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு லால்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.