விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 10th August 2021 01:27 AM | Last Updated : 10th August 2021 01:27 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாநகரில் விதிகளை மீறி உணவுப் பொருள்கள் விற்பனைசெய்த 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 10 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் ஆா். ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் 4 குழுக்களாகப் பிரிந்து, ஸ்ரீரங்கம், தில்லைநகா், உறையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கலப்பட டீ தூள் போன்றவை விற்பனை செய்யப்படுகிா, உணவுப் பொருள்களின் தயாரிப்பு, காலாவதி தேதி சரியாக உள்ளதா என 137 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் உற்பத்தி, காலாவதி தேதிகளைக் குறிப்பிடாத 4 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 10 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, 5 கடைகளுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.