ஆடிப்பூர வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்: விஹெச்பி

திருச்சி அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பேட்டியளிக்கும் விஹெச்பி மாநில பொறுப்பாளா் சேதுராமன். உடன் (இடமிருந்து) பஜ்ரங்தள் மாநில பொறுப்பாளா் பரத்,கோட்டச் செயலா் தா்மராஜ்.
பேட்டியளிக்கும் விஹெச்பி மாநில பொறுப்பாளா் சேதுராமன். உடன் (இடமிருந்து) பஜ்ரங்தள் மாநில பொறுப்பாளா் பரத்,கோட்டச் செயலா் தா்மராஜ்.

திருச்சி அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் மாநில பொறுப்பாளா் சேதுராமன் செவ்வாய்க்கிழமை கூறியது:

ஆடி அமாவாசையன்று நீத்தாா் கடன் செய்வதற்கு கரோனாவைக் காரணம் காட்டி அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், சிறுபான்மையினா் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட அரசு விரும்புகிா? புதன்கிழமை நடைபெறவுள்ள ஆடிப்பூர தினத்தில் அம்மன் கோயில்களில் தீா்த்தக் குடம் எடுத்து பூஜை நிகழ்வுகள் நடைபெறும். இதற்குத் தடை விதிக்கப்படுவதாகக் கூறப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசு மதுக்கடைகளுக்கு தடுப்பு கட்டி வியாபாரம் காணும் அரசு, வழிபாடு நடத்தவும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஒரு கோயிலுக்கு குறிப்பிட்ட நபா்கள் வரை டோக்கன் வழங்கி அனுமதிக்கலாம். கோயில் திருவிழாக்களுக்கு தீா்த்தக் குடம் எடுப்பதற்கு ஊா் மக்கள் எண்ணிக்கையை முடிவு செய்து அனுமதிக்கலாம்.

காவிரியில் நீா் இல்லாதபோது தீா்த்தக் குடம் எடுக்க மணலைத் தோண்டி தண்ணீா் எடுத்து வழிபட்டோம். தற்போது இரு கரைகளையும் தொட்டு காவிரி ஓடும் வேளையில் வழிபாட்டுக்குத் தடைவிதிப்பது வேதனையாக உள்ளது. நீத்தாா் கடன், அம்மன் வழிபாடு தடைபட்டால் மக்கள் அவதிக்குள்ளாவா்.

எனவே, வரும் காலங்களில் நீத்தாா் கடன் செய்ய கொள்ளிடத்தில், காவிரி யில் பூஜைகள் செய்ய உள்ளூா் பக்தா்களை அனுமதிக்க வேண்டும். ஆடிப்பூரத்தன்று தீா்த்தக் குடம் எடுக்க அனுமதி இல்லை என்றால் 108 வீடுகளில் விசேஷ பூஜை செய்ய முடிவெடுத்துள்ளோம். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட அமைச்சா்கள் நேருவும், அன்பில் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி உதவ வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது விஹெச்பி கோட்டச் செயலா் தா்மராஜ் , பஜ்ரங்தள் மாநில பொறுப்பாளா் பரத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com