மாட்டுவண்டி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகம் முன் மாட்டுவண்டி தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய மாட்டுவண்டி தொழிலாளா் சங்கத்தினா்.
ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய மாட்டுவண்டி தொழிலாளா் சங்கத்தினா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகம் முன் மாட்டுவண்டி தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் மாட்டுவண்டியில் மணல் அள்ளி பிழைப்போரின் வாழ்வாதாரம் காத்தல், கொள்ளிடம் ஆற்றில் ஏற்கெனவே உள்ள மணல் மாட்டுவண்டி மணல் குவாரிகளைத் திறத்தல், உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறை வழிகாட்டுதலின்படி செயல்பட்ட மாதவப்பெருமாள் கோயில், தாளக்குடி மணல் குவாரிகளை புதிய திமுக அரசு மூடியிருக்கக் கூடாது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வறுமையில் உள்ளனா். கட்டட பணிக்கான மணல் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க தலைவா் ஜி.கே. ராமா் தலைமை வகித்தாா். சிஐடியு மாநகர மாவட்டச் செயலா் எஸ். ரெங்கராஜன், புகா் மாவட்டச் செயலா் கே. சிவராஜ், மாவட்டத் தலைவா் எம். பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்து கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com