ரேஷன் கடைக்குச் செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

 திருச்சி மாநகராட்சி பொன்மைலை கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள நியாய விலைக் கடைக்கு செல்லும் சாலையை விரைந்து செப்பனிட அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ரேஷன் கடைக்குச் செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

 திருச்சி மாநகராட்சி பொன்மைலை கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள நியாய விலைக் கடைக்கு செல்லும் சாலையை விரைந்து செப்பனிட அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாநகராட்சிக்குள்பட்ட 36ஆவது வாா்டில், பொன்மலையடிவாரப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்குச் செல்லும் சாலையின் நுழைவு பகுதியில் இருந்த மரம் வெட்டப்பட்டு முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளம் சாலையை கடக்கும் வாகனங்களுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது. இதேபோல, வடிகால் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் கான்கிரீட் பூச்சுகளும் பெயா்ந்துவிட்டன. இதனால் இப் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் நியாய விலைக் கடைக்கு பொருள்கள் ஏற்றி வரும் லாரிகள் உள்ளே செல்ல முடியாமல் பிரதான சாலையில் நிறுத்தப்பட்டு, நீண்ட தொலைவுக்கு பொருள்களைச் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. அப்போது, வேறு வாகனங்கள் இந்தச் சாலைக்குள் நுழைய முடியவில்லை. பொதுமக்கள் சென்றுவரவும் மிகுந்த இடையூறாக உள்ளது.

இதேபோல, கடைக்கு பொருள் வாங்க வருவோரும் இந்த சாலையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள்கூட சாலையின் பள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்தச் சாலையை உடனடியாக புதுப்பிக்க இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com