தமிழக பட்ஜெட்டுக்கு திருநாவுக்கரசா் எம்பி வரவேற்பு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நகரம், கிராமங்கள் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளா்ச்சி ஏற்படும் விதத்திலும், அனைத்துப் பகுதி மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும் அனைத்து திட்டங்களும் சீராகவும் சிறப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நகர, கிராமப்புறங்களிலும் குடிசைகளில் வாழ்வோா் அல்லது வீடில்லாதோருக்கு வீடுகள் வழங்கப்படும் என்பதும் பாராட்டுக்குரியது.

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் ஏற்படுத்தப்படும் என்னும் அறிவிப்பும் மகிழ்ச்சிக்குரியது. மேலும் ஆரம்ப கல்வி வளா்ச்சிக்கும், தரமான கல்வியை அரசுப் பள்ளிகளில் வழங்கவும் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு திருச்சி எம்பி என்னும் வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு நன்றி, பாராட்டு தெரிவிக்கிறேன்.

சாலை, குடிநீா் வசதி, கூடுதல் மின் உற்பத்தி, கூடுதலாக 1000 பேருந்துகள், கூடுதல் இலவச ஆம்புலன்ஸ், முதல்வரின் மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, 27 நகரங்களில் புதை சாக்கடைத் திட்டம், 10 கலை அறிவியல் கல்லூரிகள், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 20,000 கோடி கடன், மகளிா் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கூட்டுறவுச் சங்க கடன்கள் சுமாா் 2,756 கோடி தள்ளுபடி. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 3 கோடியில் விளையாட்டரங்கம். பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 வரி குறைப்பு, கரோனாவால் பெற்றோரை இழந்த சுமாா் 6,000 குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் நிதி உதவித் திட்டம், சித்தா பல்கலைக் கழகங்கள், பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி, இப்படி பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்பிற்குரியது.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட தொழில் வளா்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை, விருதுநகா், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் சிப்காட் தொழிற்பேட்டைகள் 1200 கோடியில் அமைக்கப்பட உள்ளதை வரவேற்கிறேன்.

ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலன், மத வழிபாட்டு தலங்களைப் பாதுகாக்க மற்றும் சீரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு இப்படி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் மக்கள் எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக உள்ளது. நல்ல தொடக்கம் தொடர வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com