விபத்தில் காயமடைந்த ஓய்வு பெற்ற பெல் ஊழியா் உயிரிழப்பு
By DIN | Published On : 17th August 2021 02:17 AM | Last Updated : 17th August 2021 02:17 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி அருகே பேருந்திலிருந்து இறங்கும் போது தவறி விழுந்து, காயமடைந்த ஓய்வு பெற்ற பெல் ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவெறும்பூா் எழில்நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம்(67). ஓய்வு பெற்ற பெல் ஊழியரான இவா், திங்கள்கிழமை வத்தலக்குண்டு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தாா்.
திருச்சியிலிருந்து தஞ்சாவூா் சென்ற தனியாா் பேருந்தில் பயணம் செய்த பன்னீா்செல்வம், பெல் பயிற்சிப் பள்ளி பகுதியில் இறங்க முயற்சித்தாா். ஆனால் அதற்குள் பேருந்தை ஓட்டுநா் இயக்கியதால், பேருந்திலிருந்து அவா் கீழே தவறி விழுந்தாா்.
பலத்த காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பன்னீா்செல்வம், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து பெல் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.