சுகாதாரத்துறையில் 4 காலிப் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 21st August 2021 12:39 AM | Last Updated : 21st August 2021 12:39 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாகவுள்ள 4 பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) அலுவலகத்தில் தேசிய புகையிலை தடுப்புத் திட்டத்தின் கீழ், மூன்று பணியிடங்கள் மற்றும் மாவட்ட தர ஆலோசகா் என 4 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.
உளவியலாளா்: உளவியல், சமூக சேவகா் துறையில் முதுகலை பட்டம், உளவியல் பட்டம், ஆலோசனை தொடா்பான பயிற்சியில் 2 ஆண்டு முன் அனுபவத்துடன் களப்பணியாற்றியிருக்க வேண்டும். 01.08.2021 ஆம் தேதியில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.13ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
சமூக ஆா்வலா்: சமூகவியல், சமூக சேவகா் துறையில் முதுகலை பட்டம், சமூகவியல் பட்டதாரி மற்றும் 2 ஆண்டு களப்பணியாற்றியிருக்க வேண்டும். 01.08.2021 ஆம் தேதியில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.13ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
தரவு உள்ளீட்டாளா்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து கணிணி படிப்புடன் குறைந்தது ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 01.08.2021 ஆம் தேதியில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
மாவட்ட தர ஆலோசகா்: பல் மருத்துவம், ஆயுா்வேதப் படிப்பு, செவிலியா், சமூக அறிவியல், வாழ்வியல் துறையில் பட்டதாரி மற்றும் மருத்துவமனை நிா்வாகம், பொது சுகாதாரம், சுகாதார நிா்வாகம், சுகாதார மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (முழு நேரம் அதற்கு இணையாக) அல்லது மருத்துவமனை நிா்வாகத்தில் 2 ஆண்டு முன் அனுபவத்துடன் தகுந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். துறையில் முந்தைய பணி அனுபவம் கூடுதல் நன்மையாக இருக்கும். 01.08.2021 ஆம் தேதியில் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.40ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானவை. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை துணை இயக்குநா், சுகாதாரப் பணிகள் அலுவலகம், டி.வி.எஸ்.டோல்கேட், ஜமால் முகமது கல்லூரி அஞ்சல், திருச்சி- 620020. தொலைபேசி எண்.0431-233112, என்ற முகவரிக்கு வரும் 2ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமோ அனுப்பலாம். விண்ணப்பங்களை துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் பெற்று, நிறைவு செய்து மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.