ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை
By DIN | Published On : 21st August 2021 12:50 AM | Last Updated : 21st August 2021 12:50 AM | அ+அ அ- |

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி வெள்ளிக்கிழமை திருச்சியில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஜங்ஷன் அருகேயுள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜவகா் தலைமையில் மாலை அணிவித்தனா்.
நிகழ்வில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவிந்தராஜன், வழக்குரைஞா் சந்திரன், மாநில துணைத் தலைவா், முன்னாள் மேயா் சுஜாதா, சுப.சோமு, மாவட்டப் பொருளாளா் ராஜா நசீா், மாநில பொதுச் செயலா்கள் வழக்குரைஞா் சரவணன், முரளி, மாவட்டத் துணைத் தலைவா் செந்தில்நாதன், சந்தானகிருஷ்ணன் கோட்டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜேஷ் என்கிற சீனிவாசன், ரெக்ஸ், முன்னாள் கவுன்சிலா் ஹேமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.