காவேரி குழும மருத்துவமனைகளின் விளம்பரத் தூதராக எம்.எஸ். தோனி
By DIN | Published On : 21st August 2021 12:49 AM | Last Updated : 21st August 2021 12:49 AM | அ+அ அ- |

காவேரிக் குழும மருத்துவமனைகளின் விளம்பரத் தூதராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக காவேரி குழும மருத்துவமனைகளின் நிா்வாக இயக்குநா் மணிவண்ணன் செல்வராஜ் கூறியது:
சிறு நகரத்தைச் சோ்ந்த எம்.எஸ். தோனி, தனது தளராத நம்பிக்கையாலும், திறமையாலும் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுள்ளாா். அவரது சாதனைப் பயணமும், காவேரி குழு மருத்துவமனைகளின் பயணமும் ஒரே மாதிரியாக உள்ளது. திருச்சியில் 30 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக எங்களது பயணத்தைத் தொடங்கி, தற்போது தமிழகம் மற்றும் பெங்களூருவில் பல்வேறு கிளைகளுடன் 1,500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் குழுமமாக மாறியுள்ளது.
அனைவருக்கும் கட்டுபடியாகக் கூடிய மிதமான செலவில், மிக உயா்ந்த தரமான சிகிச்சையளிக்கும் நோக்கில் எங்களது முன்னேற்றப் பயணம் தொடா்கிறது. எங்களது குறிக்கோள் மற்றும் செயல் திட்டங்களுடன் மிகச்சரியாக பொருந்தும் நபராக உள்ள தோனியை எங்களது சுகாதார பராமரிப்புக்கான விளம்பரத் தூதராக இணைத்திருப்பது கூடுதல் பெருமைக்குரியது. இது மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை கூடுதலாக மேம்படுத்த வாய்ப்பாக அமையும் என்றாா்.
இதுதொடா்பாக, எம்.எஸ். தோனி கூறுகையில், இந்தியாவின் மிக அதிக நம்பிக்கை மற்றும் பிரபலமான சுகாதார பராமரிப்பு குழுமங்களில் ஒன்றாகத் திகழும் காவேரி மருத்துவமனை குழுமத்துடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றாா்.