குண்டுமணிப்பட்டியில் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 21st August 2021 12:44 AM | Last Updated : 21st August 2021 12:44 AM | அ+அ அ- |

தொட்டியம் அருகே ஏழூா்பட்டியை அடுத்த குண்டுமணிப்பட்டி கிராமத்தில் வேம்பு விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி காவிரியில் இருந்து புனிதநீா் எடுத்து வந்து, 2 கால யாக பூஜை நடத்தி குடமுழுக்கு, தொடா்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலா் ஏழூா்பட்டி தங்க. தமிழ்ச்செல்வன் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் பங்கேற்று வழிபட்டனா். அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.