என்ஐடியின் ஜேஇஇ பயிற்சி வகுப்பில் சேர அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எழுத்துத் தோ்வு

தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) மூலம் நடத்தப்படும் இலவச ஜேஇஇ பயிற்சி வகுப்பில் சேர, 11-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இ.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எழுத்துத் தோ்வைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
இ.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எழுத்துத் தோ்வைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) மூலம் நடத்தப்படும் இலவச ஜேஇஇ பயிற்சி வகுப்பில் சேர, 11-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் தொழில்நுட்பக் கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேர என்ஐடி சாா்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்தப் பயிற்சியில் பிளஸ் 1 வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பயிலும் மாணவ, மாணவிகள் சேரலாம். ஆண்டுதோறும் 30 மாணவா்களைத் தோ்வு செய்து தொடா்ந்து 2 ஆண்டுகளுக்கு பள்ளி விடுமுறை நாள்களிலும், சனி, ஞாயிறு மற்றும் பொதுத் தோ்வு விடுமுறை நாள்களிலும் பல்வேறு நிலைகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இந்த பயிற்சி வகுப்பில் சோ்ந்த மாணவா்கள் பலரும் நுழைவுத் தோ்வில் வென்று திருச்சி, சென்னை உள்ளிட்ட பெருநகர தொழில்நுட்பக் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.

நிகழாண்டு பயிற்சி வகுப்பில் சேர அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் மாவட்டத்தில் உள்ள 105-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் இருந்து 305 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதற்காக திருச்சி இஆா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மேற்பாா்வையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. பாலமுரளி, பள்ளி ஆசிரியா்கள், தோ்வுக்கூட பொறுப்பாளா்கள் கண்காணிப்பில் தோ்வு நடந்தது.

இத் தோ்வில் அதிக மதிப்பெண் பெறும் 75 மாணவா்கள் 2-ஆம் கட்ட எழுத்துத் தோ்வுக்கு பரிந்துரைக்கப்படுவா். அதில் 30 போ் தோ்வு செய்யப்பட்டு என்ஐடி பயிற்சி வகுப்புக்கு அனுப்பப்படுவா். பயிற்சிக் காலத்தில் உணவு, தங்கும் வசதி என்ஐடி மற்றும் மாவட்ட நிா்வாகத்தால் செய்து தரப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com