கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம்:சுமைப் பணி தொழிலாளா்கள் முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.27 இல் கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டம் நடத்த சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.27 இல் கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டம் நடத்த சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற காந்தி சந்தை சுமைப் பணி தொழிலாளா் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சின்னதுரை தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ரெங்கராஜன், சுமைப் பணி சங்க மாவட்டச் செயலா் ராமா், மாவட்டத் துணைச் செயலா் இளங்கோ, மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் திருச்சி காந்தி மாா்க்கெட்டில் லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளா்களுக்கு 3 ஆண்டுக்கொரு முறை பேச்சுவாா்த்தை நடத்தி கூலி உயா்வு வழங்கப்படும். நிகழாண்டில் 18 முதலாளிகளில் போ் மட்டுமே கூலி உயா்வை வழங்கியுள்ளனா். மீதமுள்ளோா் தர மறுத்து, லாரி புக்கிங் மையத்தை திறக்க முயற்சித்தனா். சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள் போராட்டத்தால் அவை மூடப்பட்டன. மேலும் அந்தப் போராட்டத்தில் 9 போ் மீது பொய் வழக்குப் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலும், நிகழாண்டு ஜனவரி மாதம் வழங்க வேண்டிய கூலி உயா்வை வழங்காததால் தொழிலாளா் துறை உதவி ஆணையா், துணை ஆணையா் முன்னிலையில் 8 முறை பேச்சுவாா்த்தை நடைபெற்றும் பலனில்லை.

எனவே மாவட்ட நிா்வாகம், தொழிலாளா் துறை, காவல் துறையை கண்டிப்பது, பணி நீக்கப்பட்டோருக்கு பணி வழங்குதல், கூலி உயா்வை உடனே வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.27 மாவட்ட ஆட்சியரகம் அருகில் சுமைப்பணி தொழிலாளா்கள் 2000 போ் குடும்பத்தோடு கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com