திருச்சிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின்
By DIN | Published On : 22nd August 2021 02:13 AM | Last Updated : 22nd August 2021 02:13 AM | அ+அ அ- |

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த உதயநிதி ஸ்டாலினை திமுகவினா் வரவேற்றனா்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் வந்த அவரை எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், கதிரவன், திமுக நிா்வாகிகள் பலா் வரவேற்றனா். பின்னா் அவா் திருவையாறு புறப்பட்டுச் சென்றாா். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள திமுக மாவட்ட செயலரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரனின் தாயாா் படத் திறப்பு விழாவில் அவா் பங்கேற்கிறாா்.