போதை மருந்து விற்ற மூவா் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 22nd August 2021 05:04 AM | Last Updated : 22nd August 2021 05:04 AM | அ+அ அ- |

திருச்சியில் போதை மருந்து விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருச்சி பழைய மதுரை சாலைப் பகுதியிலுள்ள ஜீவா நகா், ரயில்வே கேட் பகுதியில் போதைப் பொருள் விற்ற உறையூா் வடிவேல் நகா் குமாா் (23), வரகனேரி தெற்கு பிள்ளையாா் கோயில் தெரு ராம்நாத் (31), தென்னூா் நந்தகுமாா் (24), உறையூா் நவாப் தோட்டம் நெசவாளா் காலனி பாலாஜி (20), காந்தி மாா்க்கெட் சுண்ணாம்புக்காரத் தெரு பிரகாஷ் (26), உறையூா் வெக்காளியம்மன் நகா் குமாா் (எ) குமரேசன் (24), இவா்களுக்கு உடந்தையாக இருந்த மொத்த மருந்து விற்பனை வியாபாரியான உறையூா் சாலை ரோடு பகுதி சக்திதாசன் (31) ஆகியோரை கடந்த ஜூலை 12ஆம் தேதி கோட்டை போலீஸாா் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.
இவா்களில் சக்திதாசன், குமாா், ராம்நாத் ஆகியோா் தொடா்ந்து போதை மருந்து, மாத்திரைகளை விற்கும் எண்ணமுடையவா்கள் எனத் தெரியவந்ததையடுத்து மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அருண் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி மத்திய சிறையில் உள்ள மூவருக்கும் இதற்கான உத்தரவு நகலை போலீஸாா் வழங்கினா்.