ஸ்ரீரங்கத்தில் திருப்ப வித்ரோத்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பவித்ரோத்ஸவ விழா வியாழக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவுற்றது.
ஸ்ரீரங்கத்தில் திருப்ப வித்ரோத்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பவித்ரோத்ஸவ விழா வியாழக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவுற்றது.

கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய திருப்பவித்ரோத்ஸவ விழா 9 நாள்கள் நடைபெற்றது. நாள்தோறும் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் 2 ஆம் நாளான 19 ஆம் தேதி பூச்சாண்டி சேவையும், 7 ஆம் நாளான 24 ஆம் தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

9 ஆம் திருநாளான வியாழக்கிழமை காலை 8.30-க்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்துக்கு வந்தாா். அங்கு தீா்த்தவாரி பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினாா். இதை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். பின்னா் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு 10 மணிக்கு திருப்பவித்ரோத்ஸவ மண்டபத்திற்கு வந்து சோ்ந்து பிற்பகல் 1 மணி முதல் மாலை 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளி, 3.30 மணி முதல் இரவு 7.45 மணி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். மேற்படி 8.30 மணிக்குப் புறப்பட்டு படிப்பு கண்டருளி, 9.15-க்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com