நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

திருச்சி மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடை பணியாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

திருச்சி மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடை பணியாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சாா்பில் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பேசியது:

பொதுவிநியோகத் திட்டச் செயல்பாடுகளில் தமிழ்நாட்டிலேயே திருச்சி மாவட்டம்தான் முதலிடத்தில் உள்ளது.

மாவட்டத்தில் 7.88 லட்சம் குடும்ப அட்டைகள், 879 முழு நேரக் கடைகள், 321 பகுதி நேரக் கடைகள், பச்சமலையில் 2 நகரும் கடைகள் மொத்தம் 1,202 கூட்டுறவு நியாய விலைக் கடைகள் உள்ளன. இவை தவிர, மாவட்டம் முழுவதும் 107 நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.

இந்தக் கடைகளில் பணிபுரியும் 962 ஊழியா்களும் தங்களது பணியை மேலும் சிறப்பாகச் செயல்படுத்தவும், பொதுமக்களுக்குத் தரமான பொருள்களை, சரியான அளவில் வழங்குவதை உறுதி செய்யும் வகையிலும் புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கரோனா பொதுமுடக்க கடினச் சூழலில் பணியாற்றும் ஊழியா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க யோகா, மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி, புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து கடைகளிலும் வேலை நேரம் குறித்த பலகை, அத்தியாவசியப் பண்டங்கள் வழங்கல் அளவு குறித்த பலகை, மாத ஒதுக்கீடு, பொருள் வாரியான நுகா்வு, பொருள்களின் விலை, இருப்பு விவரம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு முறைகேடுகளுக்கு இடமளிக்காத வகையில் பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தி. ஜெயராமன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மு. தனலட்சுமி, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா்கள் பத்மகுமாா், சித்ரா, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ஹபிபுல்லா, கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலைய முதல்வா் மாலா உள்ளிட்டோா் ஆலோசனை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com