திண்ணக்கோணம் ஊராட்சியில் பனை விதைப்பு பணி தொடக்கம்

முசிறி வட்டம் திண்ணக்கோணம் ஊராட்சியில் பனை விதை விதைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முசிறி வட்டம் திண்ணக்கோணம் ஊராட்சியில் பனை விதை விதைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பணியை ஊராட்சித் தலைவா் செ. ரஞ்சிதா தலைமை வகித்து தொடங்கி வைக்க, வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதி சாலையோரங்களில் பனை விதைகளை விதைத்தனா்.

ஏற்பாடுகளை திண்ணகோணம் அகத்தியா் உழவா் உற்பத்தியாளா் நிறுவன மேலாண்மை இயக்குநா் விதை யோகநாதன் செய்து, விதைகளை இலவசமாக வழங்கினாா். மேலும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைக்கும் முயற்சியில் ஊராட்சி தலைவா் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஈடுபட்டுள்னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com