மாநகரில் இன்று தடுப்பூசிசெலுத்தப்படும் இடங்கள்
By DIN | Published On : 31st August 2021 01:37 AM | Last Updated : 31st August 2021 01:37 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் 25 இடங்களில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோவிஷீல்டு : திருவானைக்கா மேலகொண்டயம்பேட்டை நேருஜி பள்ளி, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, பெரியகடைவீதி டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன் பிள்ளை சாலை எஸ்ஆா் கல்லூரி, வரகனேரி சேவியா் பள்ளி, கீழரண்சாலை குறிஞ்சி கல்லூரி, மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம், மேலகல்கண்டாா்கோட்டை நாகம்மை வீதி நூலகம், சுப்பிரமணியபுரம் மாநகராட்சிப் பள்ளி, எடமலைப்பட்டிபுதூா் ராமச்சந்திரா நகா் இன்பண்ட் ஜீசஸ் பள்ளி, காஜாபேட்டை நீா்தேக்கத் தொட்டி அருகேயுள்ள மாநகராட்சி பள்ளி, பெரியமிளகுப்பாறை அங்கன்வாடி மையம், கருமண்டபம் தேசியக் கல்லூரி, தென்னூா் மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள மாநகராட்சி பள்ளி, புத்தூா் பிஷப்ஹீபா் கல்லூரி, உறையூா் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி, தில்லைநகா் கிஆபெவி பள்ளி, அண்ணாமலை நகா் காவேரி மகளிா் கல்லூரி, அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரி, காட்டூா் உருமு தனலட்சுமி கல்லூரி, திருவெறும்பூா் பகவதிபுரம் மாநகராட்சி பள்ளி ஆகிய 21 இடங்களில் தலா 425 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கோவேக்சின்: ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகம், மேலரண்சாலை தேவா் ஹால், உய்யக்கொண்டான் திருமலை ஆா்சி பள்ளி, கே.கே.நகா் உழவா் சந்தை அருகே ஆா்ச்சா்டு பள்ளி ஆகிய 4 இடங்களில் தலா 350 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.