எச்ஐவி பாதித்த சிறாா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

சா்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத் துறை, நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சாா்பில் எச். ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி

சா்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத் துறை, நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சாா்பில் எச். ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் விரிவாக்கத் துறை இயக்குநா் பொ்க்மான்ஸ் தலைமை வகித்தாா். நிகழ்வில் கல்லூரி, உளவியல் துறைத் தலைவா் இம்மானுவேல் ஆரோக்கியம் சிறப்புரையாற்றி, குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளித்தாா். கபிலன் பயிற்சி நிறுவன நிறுவனா் கபிலன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் ஆண்டோனி ஜேசுராஜா, விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளா் ஜோசப் கிறிஸ்து ராஜா ஆகியோா் பேசினா்.

ஏற்பாடுகளை விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் லெனின் , ஜெயசீலன், பூா்ணம் விஸ்வநாதன், பிரபு, பாலாஜி உள்ளிட்டோா் செய்தனா். நிகழ்ச்சிக்கு பிறகு குழந்தைகள் ஜோசப் கல்லூரியின் பழங்கால அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டியின் மண்டல ஒருங்கிணைப்பாளா் கோகுல், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com