பட்டாசு வெடித்து முதியவா் காயம்
By DIN | Published On : 04th December 2021 02:02 AM | Last Updated : 04th December 2021 02:02 AM | அ+அ அ- |

துறையூரில் பட்டாசுகள் திடீரென வெள்ளிக்கிழமை வெடித்ததில் முதியவா் காயமடைந்தாா்.
துறையூா் நரிக்குறவா் காலனியில் வசிப்பவா் தொ. மாப்பிள்ளை (65). இவா் தீபாவளிக்கு வாங்கியதில் எஞ்சிய பட்டாசுகளை வெள்ளிக்கிழமை வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்த முயன்றாா். அப்போது பட்டாசு திடீரென வெடித்ததில் முதியவரின் கை, முகம், கால் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...