முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இருவா் கைது
By DIN | Published On : 10th December 2021 08:20 AM | Last Updated : 10th December 2021 08:20 AM | அ+அ அ- |

திருச்சியில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் போலீஸாா் கைதுசெய்தனா்.
அரியமங்கலம் அண்ணாநகா், மேலஅம்புகாபுரம் அருகில் பெ. சிலம்பரசன் (25) சில நாள்களுக்கு முன் மா்ம நபா்களால் கொல்லப்பட்ட வழக்கில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து இளவரசன் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் பாலக்கரை மேட்டுத் தெருவில் கடந்த நவ.21 ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரை இளவரசனின் கூட்டாளியான கிருபாகரன் திட்டி கத்தியால் குத்தினாா். புகாரின் பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து கிருபாகரனை கைது செய்து சிறையிலடைத்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய இளவரசன், கிருபாகரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். அதற்கான நகலை மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் போலீஸாா் வியாழக்கிழமை வழங்கினா்.