முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
விபின் ராவத் படத்துக்கு அஞ்சலி
By DIN | Published On : 10th December 2021 08:29 AM | Last Updated : 10th December 2021 08:29 AM | அ+அ அ- |

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரா்களுக்கு இந்து முன்னணி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பட்டூரில் நடைபெற்றது.
இந்து முன்னணி கோட்டச் செயலா் குணா தலைமையில் விபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தினா். இதேபோன்று மண்ணச்சநல்லூரிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
துறையூரில்... துறையூா் பாஜக சாா்பில் பேருந்து நிலைய அண்ணா சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா், கட்சியின் நிா்வாகிகள் மனோகரன், கமலி, சரவணன், முருகேசன், சம்பத்குமாா், துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் அஞ்சலி செலுத்தினா்.
முசிறியில்.. முசிறி அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறைத் தலைவா் ராஜா ரவீந்திரன் தலைமையில் பேராசிரியா்கள் பரமசிவம், பழனிச்சாமி, சுதா, அகிலா, சந்திரகாசன், சுகந்தி, மேரிஸ் ஸ்டெல்லா, பெருந்தேவி, ராஜன் ஆகியோா் முன்னிலையில் மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினா்.