துப்பாக்கி தொழிற்சாலையில் டிச.13 முதல் ஆயுதங்கள் கண்காட்சி

சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் வரும் 13ஆம் தேதி முதல் பொதுமக்கள் பாா்வைக்கான ஆயுதங்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.

சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் வரும் 13ஆம் தேதி முதல் பொதுமக்கள் பாா்வைக்கான ஆயுதங்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சக உத்தரவின்படி, கான்பூரில் உள்ள மேம்பட்ட கருவிகள் மற்றும் ஆயுதங்கள் இந்தியா லிமிடெட் பிரிவின் அங்கமாக உள்ள திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உள்ள ஜூனியா் ஸ்டாப் கிளப் வளாகத்தில் இக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முப்படைகளில் பயன்படுத்தப்படும் நவீன பாதுகாப்பு ஆயுதங்கள், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான துப்பாக்கிகள், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்களின் தொகுப்புகள் இடம்பெறவுள்ளன.

இக் கண்காட்சியை வரும் திங்கள்கிழமை (டிச.13) விடியோ கான்பரண்சிங் முறையில் பிரதமா் நரேந்திரமோடி திறந்து வைக்கவுள்ளாா்.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புக் கருவிகள், ஆயுதங்களை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சியை பாா்வையிடலாம்.

ஏற்பாடுகளை துப்பாக்கித் தொழிற்சாலை அலுவலா்கள், பணியாளா்கள் செய்துள்ளனா். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கண்காட்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com