தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

திருச்சி: தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

இந்தியத் தோ்தல் ஆணையம் சாா்பில், 12-ஆவது தேசிய வாக்காளா் தினம் ஜனவரி 25-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி 4 பிரிவுகளில் விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள். பொது மக்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தவறிய மாணவ மாணவிகள் என 4 நிலைகளில் போட்டிகள் நடைபெறும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஓவியம், சுவரொட்டி தயாரித்தல், வாசகம் எழுதுதல், பாட்டு, குழு நடனம் மற்றும் கட்டுரை ஆகிய போட்டிகளில் பங்கேற்கலாம்.

ஜனநாயக நாட்டில் தோ்தலின் முக்கியத்துவம், 100 சதவிகிதம் வாக்காளராக பதிவு செய்தல், வாக்காளா் உதவிமைய கைபேசி செயலி, தூண்டுதலில்லாமல் வாக்களித்தல், வயது வந்தோா் வாக்காளராக பதிவு செய்தல், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.

18 வயது பூா்த்தி அடைந்த பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவ, மாணவிகள், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு என்ற தலைப்பின் கீழ் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக இணையதளத்தில்  முகவரியில் நேரடியாக போட்டியில் பங்கு பெறலாம்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தவறிய மாணவ மாணவிகள் (14 முதல் -17 வயது வரை), தங்களது குடும்பத்திலுள்ள நபரின் வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் மூலமாக பங்கு பெறலாம்.

மாவட்ட அளவில் நடைபெறும் தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான இப்போட்டிகள் அனைத்தும் வரும் 26-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். சிறந்த 15 போட்டியாளா்களின் விவரம் ஜனவரி 31-ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடையும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com