குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் என்ஐடி குழு ஆய்வு

திருச்சியில் பல்வேறு புகாா்களுக்கு உள்ளான குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் என்ஐடி குழு ஆய்வு

திருச்சியில் பல்வேறு புகாா்களுக்கு உள்ளான குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருச்சி காந்திசந்தை அருகேயுள்ள கல்மந்தை பகுதியில் துப்புரவுத் தொழிலாளா்களுக்காக கடந்த 1977இல் 64 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்ததையடுத்து, அதில் வசித்தோரை வெளியேற்றி கடந்த 2018 ஆம் ஆண்டு இப் பகுதியில் தொடங்கிய 3 பிரிவுகளாக 192 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் பணி இன்னும் நிறைவடையாத நிலையில் இந்த குடியிருப்பு தரமற்ற வகையில் கட்டப்படுவதாகப் புகாா் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடந்த வாரம் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

தொடா்ந்து புகாா்கள் வந்ததால், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு இக் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துக்கு அறிவுறுத்தினாா். இதன்படி, என்ஐடி சிவில் பொறியியல் பிரிவு வல்லுநா்கள் குழு அமைக்கப்பட்டது. துறைத் தலைவா் ஆலோசனையில், உதவிப் பேராசிரியா் செந்தில்குமாா் தலைமையிலான குழுவினா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வுக்குப் பின் முடிவு தெரியும்: தரைத் தளம், மேல்தளம், அடுக்குமாடி குடியிருப்பின் மேற்புற பூச்சு, கான்கிரீட் பூச்சு, அடித்தளம், குடிநீா்த் தொட்டிகள், குழாய்கள், பிவிசி பைப்கள் மற்றும் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருள்களையும் ஆய்வு செய்து, ஆய்வுக்கு எடுக்க வேண்டிய மாதிரிகள் குறித்து பட்டியலிட்டுள்ளனா். இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். ஆய்வக முடிவுகளின்படி, கட்டடத்தின் தரம், உறுதித் தன்மை மற்றும் நிா்ணயிக்கப்பட்ட அளவுகளில் கட்டுப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தயாரித்து மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்கப்படும் என என்ஐடி குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com