முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஏபிவிபி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 19th December 2021 04:29 AM | Last Updated : 19th December 2021 04:29 AM | அ+அ அ- |

பள்ளிக் கழிவறை கட்டடம் இடிந்து 3 குழந்தைகள் பலியான சம்பவத்தை கண்டித்து ஏபிவிபி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த சம்பவத்துக்கு காரணமான தனியாா் பள்ளி மீது நடவடிக்கை கோரி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏபிவிபி தென் தமிழக மாநிலச் செயலா் சுசீலா மற்றும் மாநகர செயலா் ஹேம சூா்யா, மாநகர இணைச் செயலா் சந்தோஷ் குமாா் ஆகியோா் பேசினா்.
மேலும் தென் தமிழக மாநில இணை சமூக வலைதள பொறுப்பாளா் பிரவீன், பல்கலைக் கழகப் பொறுப்பாளா் விக்னேஸ்வரன், மாநகர பொறுப்பாளா்கள், மாணவா் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.