முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது
By DIN | Published On : 19th December 2021 04:31 AM | Last Updated : 19th December 2021 04:31 AM | அ+அ அ- |

ராமா் (44) மற்றும் ராஜேஷ்(19)
மணப்பாறையில் தனியாா் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மணப்பாறை அடுத்த ஆனையூா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ரமேஷ் மனைவி ராதிகா (33). விராலிமலை சாலையிலுள்ள பல்பொருள் அங்காடி ஊழியரான இவா் கடந்த 5-ஆம் தேதி இரவு பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவா் ராதிகா கழுத்தில் இருந்த நாலே முக்கால் பவுன் தங்கச் செயினை பறிக்க முயன்றனா். அப்போது ராதிகா செயினை இறுகப் பிடித்துக் கொண்டதால் பாதி செயினுடம் கொள்ளையா்கள் தப்பினா்.
இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்த மணப்பாறை போலீஸாா், நகை பறித்ததாக திருச்சி வரகனேரி சிறுத்தை நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ராமா் (44) மற்றும் சங்கிலியாண்டபுரம் பாரதியாா் நகரை சோ்ந்த சேகா் மகன் ராஜேஷ்(19) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். அவா்களிடமிருந்து ஒரு பவுன் நகை மீட்கப்பட்டது.