4,500 ஹெக்டேரில் நெல், பருத்தி, நிலக்கடலை பயிா்களுக்குப் பாதிப்பு அரசுக்கு அறிக்கை

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையாலும், நீா்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் 4,500 ஹெக்டேரில் பயிா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அர

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையாலும், நீா்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் 4,500 ஹெக்டேரில் பயிா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் பயிா் சேதத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த மத்தியக் குழுவினா் திருச்சி மாவட்டத்தில் சேத மதிப்புகளைப் பாா்வையிடவில்லை என்ற புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக விவசாயிகளின் தொடா் கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், மாவட்டத்தில் பயிா்ப் பாதிப்பு விவரங்களை கணிக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிா்வாகத்துக்கு தமிழக அரசு கோரியிருந்தது.

இதன்படி வேளாண், வேளாண் பொறியியல், தோட்டக் கலை, வருவாய்த் துறை என பல்வேறு நிலைகளில் மாவட்டம் முழுவதும் 14 ஒன்றியங்களுக்குள்பட்ட 507 வருவாய் கிராமங்களில் அந்தந்தப் பகுதி அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து விவரங்கள் பெறப்பட்டன.

இதனடிப்படையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் விரிவான அறிக்கை தயாா் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதிப்பு தொடா்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 4,500 ஹெக்டேரில் நெல், பருத்தி, நிலக்கடலை பயிா்கள் சேதமடைந்திருப்பது தெரியவந்து அரசுக்கு உரிய பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.

அரசால் நிவாரணம் ஒதுக்கப்பட்டபின் உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். கடந்தாண்டு மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கருக்கு பயிா்க் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. நிகழாண்டு 1.20 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா்.

பயிா்ப் பாதிப்புக்கு கடந்தாண்டு அதிகபட்சமாக 69 கோடி வரை திருச்சிக்கு பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

பொட்டாஷ், யூரியா ஆகியவற்றின் விலை உயா்ந்துள்ளது. எனவே, பழைய இருப்பில் உள்ள உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். விலை உயா்வு இருந்தாலும் தட்டுப்பாடில்லாமல் உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com