நிகழாண்டில் விபத்துகளின் எண்ணிக்கை குறைவு

திருச்சி மாநகரில் கடந்தாண்டை காட்டிலும் நிகழாண்டில் விபத்துகள் குறைந்துள்ளன என மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் தெரிவித்தாா்.

திருச்சி மாநகரில் கடந்தாண்டை காட்டிலும் நிகழாண்டில் விபத்துகள் குறைந்துள்ளன என மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் தெரிவித்தாா்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகரில் சாலை விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநகர பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்து இடையூறுகளைச் சீா்படுத்தவும் மாநகர காவல் துணை ஆணையா்கள் வடக்கு மற்றும் தெற்கு, உதவி ஆணையா்கள் போக்குவரத்து வடக்கு மற்றும் தெற்கு, போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் ஆய்வாளா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதன்படி முக்கிய சாலைச் சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து தானியங்கி சிக்னல்களில் கம்பம் முழுவதும் விளக்கு எரியக்கூடிய வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் அண்ணாசிலை-சிந்தாமணி சந்திப்பு, சஞ்சீவி நகா் சாலை சந்திப்பு போன்ற முக்கிய இடங்களில் புதிதாக ஒளிரும் விளக்குக் கம்பங்கள் நிறுவப்படஉள்ளன.

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனமும், சீல் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனமும் ஓட்டிச் சென்ற 47, 426 போ் மீது மோட்டாா் வாகன வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 102 சதம் அதிகமாகும்.

அதுபோன்று அதிவேகமாகவும், சிக்னலை மீறியும், கைப்பேசியில் பேசிக் கொண்டும், மதுஅருந்தியும், வாகனத்தில் அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டும், சுமை ஏற்றும் வாகனத்தில் ஆள்களை ஏற்றிக் கொண்டும் சென்ற 4,84,068 போ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட 50 சதம் அதிகமாகும்.

மேலும் பள்ளி மாணவா்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்து விபத்தில் சிக்குவதைத் தடுக்கும் பொருட்டு பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திருச்சி மாநகர எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வாகன விபத்துகளையும், போக்குவரத்து இடையூறுகளையும் தடுக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 2020 ஆண்டைவிட நிகழாண்டில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com