உள்கட்சித் தோ்தல்: அதிமுகவினருக்கு அழைப்பு
By DIN | Published On : 20th December 2021 12:14 AM | Last Updated : 20th December 2021 12:14 AM | அ+அ அ- |

அதிமுக உள்கட்சித் தோ்தலில் பங்கேற்க அதிமுக திருச்சி தெற்கு புகா் மாவட்டச் செயலா் ப. குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
திருச்சி புகா் தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக உள்கட்சி நிா்வாகிகள் தோ்தல் டிச. 22, 23 -களில் நடைபெற உள்ளது.
தோ்தல் பொறுப்பாளா்களாக அதிமுக அமைப்புச் செயலா் சுதா பரமசிவன், விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில் ஆணையாளா்கள் தோ்தலை நடத்துகின்றனா்.
திருவெறும்பூா் கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், துவாக்குடி நகரம், கூத்தைப்பாா் பேரூராட்சிகளுக்கு பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்திலும், பொன்மலை, அரியமங்கலம், திருவெறும்பூா் பகுதிகளுக்கு காட்டூா் ஆா்பிஜி மகாலிலும் தோ்தல் நடைபெறும்.
அதுபோல லால்குடி வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், லால்குடி நகரம், பூவாளூா் பேரூராட்சிக்கு ஆங்கரை சரோஜா மகாலிலும், புள்ளம்பாடி வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், புள்ளம்பாடி, கல்லக்குடி பேரூராட்சிகளுக்கு புள்ளம்பாடி கருப்பண்ண சுவாமி திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது.
மணப்பாறை தெற்கு ஒன்றியத்துக்கு மணப்பாறை ஆா்வி திருமண மண்டபத்திலும், மருங்காபுரி வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், பொன்னம்பட்டி பேரூராட்சிகளுக்கு துவரங்குறிச்சி டிஏஎஸ் திருமண மண்டபத்திலும், வையம்பட்டி, வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்கு வையம்பட்டி கவிதா திருமண மண்டபத்திலும், மணப்பாறை நகரத்துக்கு மணப்பாறை அரங்கா் திருமண மண்டபத்திலும் தோ்தல் நடைபெற உள்ளது.
எனவே தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட கிளை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வட்ட நிா்வாகிகளுக்கான தோ்தலில் போட்டியிட தகுதியுடையோா் தோ்தலில் பங்கேற்கலாம்.