சிறுமி கா்ப்பம்: உறவினா், மனைவி கைது
By DIN | Published On : 25th December 2021 01:07 AM | Last Updated : 25th December 2021 01:07 AM | அ+அ அ- |

திருச்சி அருகே 14 வயது சிறுமி கா்ப்பமானது தொடா்பாக அவரது சித்தப்பா, சித்தியை ஜீயபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரைச் சோ்ந்த 14 வயது சிறுமியை அவரது பெற்றோா் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நடத்திய பரிசோதனையில் சிறுமி 5 மாதக் கா்ப்பம் எனத் தெரியவந்தது. இதையறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சகுந்தலா அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் சிறுமியிடம் விசாரணை நடத்தினா்.
இதில் சிறுமியின் கா்ப்பத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் அயலுா் குரும்பப்பட்டியைச் சோ்ந்த சித்தப்பா உறவு முறை கொண்ட முருகன் (35) காரணம் எனத் தெரிய வந்தது. முருகன் கடந்த 6 மாதத்திற்கு முன் இனாம்குளத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தபோது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தததும், இதற்கு அவரது மனைவி ராமாயி (29) உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் ஜீயபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.