ஜன.15 வரை அரியலூா் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி கோட்டத்திற்குள்பட்ட அரியலூா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3ஆவது யாா்டு அமைக்கும் பணி நடைபெறுவதால் அரியலூா் வழித்தட ரயில் சேவை அடுத்த 21 நாள்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி கோட்டத்திற்குள்பட்ட அரியலூா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3ஆவது யாா்டு அமைக்கும் பணி நடைபெறுவதால் அரியலூா் வழித்தட ரயில் சேவை அடுத்த 21 நாள்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜன. 15 வரை ஓட்டக்குடி- அரியலூா் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை - குருவாயூா் தினசரி அதிவிரைவு ரயில் (16127) டிச. 30 தவிர டிச.26 முதல் ஜன. 10 வரை விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம் வழியாக இயக்கப்படாமல் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக திருச்சி ரயில் நிலையத்தை வந்தடையும்.

குருவாயூா்-சென்னை தினசரி அதிவிரைவு ரயில் (16128) ஜன. 9 மட்டும் வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல் திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும்.

அஜ்மீா்- ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் ( 20973) டிச. 25, ஜன. 1, 8 ஆகிய 3 நாள்கள் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம் வழியாக இயக்கப்படாமல் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக திருச்சியைச் சென்றடையும்.

பிகானீா்-மதுரை வாராந்திர அதிவிரைவு ரயில் (22632) டிச. 26, ஜன. 2 ஆகிய 2 நாள்கள் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக திருச்சிக்கு இயக்கப்படவுள்ளது.

மதுரை-சென்னை தினசரி அதிவிரைவு ரயில் (12636) டிச.30, 31, ஜன. 6 ஆகிய நாள்களில் திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும். இந்த ரயில் சென்னை- தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை-காரைக்குடி தினசரி அதிவிரைவு ரயில் (12605) டிச.30, 31, ஜன.6 ஆகிய மூன்று நாள்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும்.

திருச்சி-திருப்பாதிரிப்புலியூா் டெமு ரயில் (06890) ஜன.10 இல் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து வழக்கமாகப் புறப்படும் நேரத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும். பகத்கீகோதி- திருச்சி அதிவிரைவு ரயில் டிச.29 இல் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வழக்கமான நேரத்தில் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.

லோகமான்ய திலக் முனையம்- மதுரை ரயில் (22101) ஜன. 5 இல் விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து 75 நிமிடம் தாமதமாகப் புறப்படும். நாகா்கோவில்-சத்ரபதி சிவாஜி முனையம் அதிவிரைவு ரயில் (16532) ஜன 6 இல் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து 45 நிமிடம் தாமதமாகப் புறப்படும். சென்னை-மதுரை விரைவு ரயில் (12635) ஜன, 10 ஆம் தேதி விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com