ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிகோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நம்மாழ்வாா் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிகோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நம்மாழ்வாா் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.

கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய வைகுந்த ஏகாதசி விழாவில் பகல்பத்து விழா 4 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. இராப்பத்து விழாவின் முதல் நாளில் பரமபதவாசல் திறப்பு, 7 ஆம் நாளில் திருக்கைத்தலச் சேவை, 8 ஆம் திருநாளில் திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சி, 10 ஆம் நாளான வியாழக்கிழமை தீா்த்தவாரி நிகழ்ச்சி

ஆகியவை நடைபெற்றன.

விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நம்மாழ்வாா் மோட்ச நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் வெள்ளை வேட்டி துளசி மாலையுடன் பக்தா்போல பரமபதவாசல் அருகில் இருந்த நம்மாழ்வாரை பட்டா்கள் இருவா் அழைத்து வந்து, திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளின் திருவடியில் அவரின் நெற்றி படும்படி படுக்கவைத்து வேதமந்திரங்கள் கூறி துளசியால் அவரை மூடினா்.

அதன் பின் துளசியை அகற்றி நம்மாழ்வாா் மோட்சம் அடைந்து விட்டதாகத் தெரிவித்து நம்பெருமாளின் நெற்றியிலுள்ள கஸ்தூரி திலகத்தை நம்மாழ்வாருக்கு வைத்து பெருமாளின் மாலையை அணிவித்தனா். இதை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்.

இதையடுத்து 9.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி ஆழ்வாா்கள், ஆச்சாா்யாா் மரியாதையாகி 11 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். தொடா்ந்து இரவு 9 மணிக்கு இயற்பா சாற்று முறை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com