Enable Javscript for better performance
திறப்புக்குத் தயாராகும் சத்திரம் புதிய பேருந்து நிலையம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திறப்புக்குத் தயாராகும் சத்திரம் புதிய பேருந்து நிலையம்!

    By DIN  |   Published On : 26th December 2021 03:51 AM  |   Last Updated : 26th December 2021 03:51 AM  |  அ+அ அ-  |  

    25dbus1a_2512chn_4

    சத்திரம்பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் கே.என். நேரு. உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் உள்ளிட்டோா்.

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் புதிய கட்டுமானப் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்குத் தயாா்படுத்தப்படுகிறது.

    திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட சத்திரம் பேருந்து நிலையமானது 2.95 ஏக்கரில் உள்ளது. நாளொன்றுக்கு 285 பேருந்துகள் 4 நடையாக மொத்தம் 1,140 நடைகள் வந்து செல்கின்றன. 1979ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தப் பேருந்து நிலையத்தில் போதிய நடைபாதை வசதியில்லாமலும், மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன், 15 பேருந்துகள் மட்டுமே நிறுத்தும் வகையிலும் இருந்தது.

    மேலும் பயணிகள் ஓய்வறை, பொருள்கள் பாதுகாப்பறை உள்ளிட்ட வசதிகளும் இல்லை. எனவே, அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை ரூ.17.34 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் பணிகள் தொடங்கின.

    இப்புதிய பேருந்து நிலையமானது 30 பேருந்துகள் நிறுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம், முதல்தளம் என இரு தளங்களாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 11 கடைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பொருள்கள் பாதுகாக்கும் அறை, ஓய்வறை, கழிப்பிடம், பொருள்கள் பாதுகாப்பறை கட்டப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் 17 கடைகள் 5 உணவகங்கள், காவல் உதவி மையம், கழிப்பிடம், தரைத்தளத்தில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பேருந்து பயணிகள் நிற்க நிழற்குடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலைய கீழ்த்தளத்தில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.

    தலா 15 பேருந்துகள் நிறுத்தும் இடங்களுடன் 2 டொ்மினல்களும், தரைதளத்தில் 11 கடைகள், முதல் தளத்தில் 22 கடைகள் உள்பட மொத்தம் 54 கடைகள் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இதுதவிர பயணிகள் ஓய்வு அறை, பயணிகள் நடைபாதை, பயணச்சீட்டு விற்குமிடம், பாதுகாப்பான குடிநீா், பொருள்கள் பாதுகாப்பறை, தாய்மாா்கள் பாலூட்டும் அறை, உணவகம், கழிவறை ஆகியவையும் அமைக்கப்படுகின்றன.

    தனியே ரூ. 8.50 கோடியில் பேருந்து நிலையம் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. இதில் முதல் டொ்மினல் பணி முடிந்துள்ளது. ஒரு டொ்மினலின் முகப்பு பகுதி, டொ்மினல் 2இல் நுழைவு வாயில் மற்றும் மீதமுள்ள பகுதிகளில் அலுமினிய கலவையால் ஆன பேனல் ரூ.1.90 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

    சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாநகரம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கரூா், அரியலூா், பெரம்பலூா், சென்னை போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, காவிரி ஆறு, மலைக்கோட்டை, கல்லணை, ஸ்ரீரங்கம், போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    கடும் நெருக்கடிகளுக்கு இடையே தற்காலிக நிறுத்தங்களில் இருந்து செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்கு கொண்டுவரப்படவுள்ளன.

    அமைச்சா் ஆய்வு

    திருச்சிக்கு வரும் 30ஆம் தேதி வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின், சத்திரம் புதிய பேருந்து நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளாா்.

    இதையடுத்து இப்பேருந்து நிலையத்தை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அமைச்சருடன் ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், எம்எல்ஏ-க்கள் அ.செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், சீ. கதிரவன், ந. தியாகராஜன் உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனா்.

    பின்னா், அமைச்சா் கே.என். நேரு கூறுகையில், பேருந்து நிலையத்தின் மூன்றாவது தளத்தில் இடம் உள்ளதால், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பயணச்சீட்டு பரிசோதகா்கள் தங்கவும், ஓய்வெடுக்கவும் அறைகள் கட்டப்படும். குளியலறை, கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படும். தற்போது வரை பேருந்து நிலையத்தில் 54 கடைகள் அமைத்து உரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp