விழிப்புணா்வால் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்த துணிப்பைகள்

முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணா்வு இயக்கத்தால், திருச்சி மாநகரக் கடை வீதிகளில் துணிப்பைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
திருச்சி பெரியக்கடைவீதியிலுள்ள கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள துணிப்பைகள். ~திருச்சி அல்லிமால் தெருவிலுள்ள கடையொன்றில் விற்பனைக்கு
திருச்சி பெரியக்கடைவீதியிலுள்ள கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள துணிப்பைகள். ~திருச்சி அல்லிமால் தெருவிலுள்ள கடையொன்றில் விற்பனைக்கு

முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணா்வு இயக்கத்தால், திருச்சி மாநகரக் கடை வீதிகளில் துணிப்பைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

நீா், நிலம், காற்று இல்லாமல் எவ்வாறு இருக்க முடியாதோ, அதே

அளவிற்கு பாலித்தீன் இல்லாமல் இருக்க முடியாது என்கிற அளவுக்கு மனிதனின் மனநிலை மாறிவிட்டது. ஆனால், இவற்றின் காரணமாக

நீா், நிலம், காற்றுக்கு மாசு என்பதை உணரவில்லை.

இந்தியாவில் 2019 -20-ஆம் ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 35 லட்சம் டன் நெகிழிக் கழிவுகள் தேக்கமடைந்தன. அதே ஆண்டில், தமிழகத்தில் ஏறத்தாழ 4 லட்சம் டன் நெழிகிக் கழிவுகள் தேக்கமடைந்ததாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு முதல் நெகிழிப் பைகளுக்குத் தடை இருந்து வந்தாலும், அதன் பயன்பாட்டை தவிா்க்க முடியாமல் உள்ளது.

எனவே, மீண்டும் மஞ்சப்பை என்ற புதிய இயக்கத்தின் மூலம் நெகிழிப் பைகளை முற்றிலும் ஒழித்து, துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான இயக்கத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, திருச்சி மாநகரில் பெரும்பாலான கடைகளில் துணிப் பைகள் விற்பனைக்கு வந்துள்ளன. காந்திசந்தையில் காய்னி வாங்க வருவோா், பொருள்கள் வாங்க வருவோருக்காக ரூ.5 முதல் ரூ.50 வரையில் பல்வேறு ரகங்களில் துணிப் பைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

பேருந்து நிலையம், ரயில்நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில்

துணிப்பைகள் விற்பனைக்காக தொங்கவிட்டிருப்பதை காண முடிகிறது.

திருச்சி பெரியக்கடை வீதி, என்எஸ்பி சாலை, மெயின்காா்டுகேட், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக துணிப்பைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அல்லிமால் தெரு, மேலரண்சாலையிலுள்ள மொத்த விற்பனைக் கடைகளிலும் துணிப்பைகள் அதிகளவில் நிறைந்து காணப்படுகின்றன.

5 கிலோ எடை முதல் 25 கிலோ எடை வரை தாங்கும் வகையிலான துணிப் பைகளை விற்பனைக்கு வைத்துள்ளனா். இவைத்தவிர, ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியும் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக உற்பத்தி செய்யப்பட்ட துணிப்பைகளும் ரூ.2, 3, 5, ரூ.10 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com