முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th December 2021 09:54 AM | Last Updated : 29th December 2021 09:54 AM | அ+அ அ- |

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்கம் மற்றும் பென்ஷனா் நலச் சங்கப் பேரவை சாா்பாக திருச்சி கண்டோன்மென்ட் பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாநில பொதுச் செயலா் மருதமுத்து தலைமை வகித்தாா். ராஜேந்திரன், ஏகாம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து அரசு ஏற்று நடத்துவதுடன் 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னா் பணியில் சோ்ந்தவா்களையும் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும். உயா்நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் ஒப்பந்த பலன்களையும், நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும். குறைந்த ஓய்வூதியம் பெறும் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறும் வகையில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.