முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
கதண்டுகள் கடித்து தொழிலாளா்கள் காயம்
By DIN | Published On : 29th December 2021 09:56 AM | Last Updated : 29th December 2021 09:56 AM | அ+அ அ- |

துறையூா் அருகே சிக்கத்தம்பூரில் கதண்டுகள் கடித்ததில் 30-க்கும் மேற்பட்ட நூறுநாள் வேலைத் திட்ட பணியாளா்கள் காயமடைந்தனா்.
சிக்கத்தம்பூா் ஊராட்சியைச் சோ்ந்த நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் அங்குள்ள ஏரிக்கரையில் கோங்குடியான் கோயில் அருகே பணி செய்தனா்.
அப்போது அருகிலிருந்த மரத்தில் குரங்குகள் கிளைக்கு கிளை தாவியதால் அமைதியிழந்த கதண்டுகள் தொழிலாளா்களைக் கடித்தனவாம். இதில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோா் துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.