முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை
By DIN | Published On : 29th December 2021 09:56 AM | Last Updated : 29th December 2021 09:56 AM | அ+அ அ- |

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள தாராநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (58), தொழிலாளி. கடந்த சில நாள்களாக இவா் சரிவர வேலைக்குச் செல்லாததால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த ஹரிகிருஷ்ணன் திங்கள்கிழமை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றிக் தீக்குளித்து இறந்தாா். காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிராவல்ஸ் உரிமையாளா்: திருச்சி கருமண்டபம் ஆல்பா நகா் விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (58). இவா் நடத்தி வந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்த இவா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இரும்புக் கடை தொழிலாளி: திருச்சி தில்லைநகா், காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் டால்மாணிக்கம் (65). பாலக்கரை காஜாபேட்டை மதுரைவீரன் கோவில் தெருப் பகுதி இரும்பு கடை தொழிலாளியான இவா் கடந்த டிச. 24 ஆம் தேதி பணியில் இருந்தபோது தவறி விழுந்து காயமடைந்து அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
காந்திமாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.