ஏழூா்பட்டியில் கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்

தொட்டியம் அருகே ஏழூா்பட்டியில் கோமாரி தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொட்டியம் அருகே ஏழூா்பட்டியில் கோமாரி தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏழூா்பட்டி அதிமுக ஒன்றிய கவுன்சிலா் தங்க. தமிழ்செல்வன் தலைமை வகித்து ஏழூா் பட்டி கால்நடை மருத்துவமனைக்கு மின்விசிறி மற்றும் மின் விளக்குகளை நன்கொடையாக வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தாா்.

ஏழூா்பட்டிபட்டி ஊராட்சித் தலைவா் செல்லம்மாள் மதுரைவீரன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சையது முஸ்தபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம். களத்தூா் கால்நடை உதவி மருத்துவா் ஆா். செல்வராஜ் நத்தம் கால்நடை உதவி மருத்துவா் கொடிமலா் மற்றும் கால்நடை ஆய்வாளா்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி, மருந்து மாத்திரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com