துறையூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

துறையூா் தனியாா் திருமணக் கூடத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியைப் பாா்வையிடும் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா், திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், துறையூா் நகர திமுக செயலா் ந. முரளி உள்ளிட்டோா்.
கண்காட்சியைப் பாா்வையிடும் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா், திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், துறையூா் நகர திமுக செயலா் ந. முரளி உள்ளிட்டோா்.

துறையூா் தனியாா் திருமணக் கூடத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

துறையூா் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் தி. நடராஜன் தலைமை வகித்தாா். நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் திருச்சி மண்டல மேலாளா் ச. குமாா், வாசகா் வட்டத் துணைத் தலைவா் வி. வேணுகோபால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

புத்தகக் கண்காட்சியை துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாரும், புத்தக அரங்கை திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரனும் தொடக்கி வைத்தனா்.

வெற்றி பெற விளையாடு என்ற தலைப்பில் யோசி பயிற்சி நிறுவன தலைமைப் பயிற்றுநா் கவி முருகபாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

நிகழ்வில் துறையூா் வட்டாரக் கல்வி அலுவலா் கு. மாா்டின், நகராட்சி ஆணையா் ஆா். டிட்டோ, காவல் ஆய்வாளா் சே. செந்தில்குமாா், ஜமீன்தாா் மேல்நிலைப் பள்ளி தாளாளா் ந. முத்துக்குமாா். திமுக நகரச் செயலா் ந. முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுதில்லி நேஷனல் புக் டிரஸ்ட், திருச்சி நியூ செஞ்சூரி புக் ஹவூஸ், துறையூா் கிளை நூலக வாசகா் வட்டம், துறையூரில் உள்ள ரோட்டரி, அரிமா, ஜேசிஐ உள்ளிட்ட பன்னாட்டு சங்கங்கள், வா்த்தகா்கள் சங்கம் மற்றும் மக்கள் நலச் சங்கத்தினா் புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்துள்ளனா். இக்கண்காட்சி ஜன. 6 வரை நடைபெற உள்ளது.

துறையூா் கிளை நூலகா் பெ. பாலசுந்தரம், வரவேற்றாா். ந. தில்லைநாயகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com