பஞ்சப்பூரில் ரூ. 832 கோடி திட்டப் பணிகள்

திருச்சி ஒருங்கிணைந்த பேருந்த முனையம் உள்ளிட்ட பல்வேறு இதர கட்டமைப்புகளை பஞ்சப்பூரில் மேற்கொள்ள ரூ.832 கோடியில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன.

திருச்சி ஒருங்கிணைந்த பேருந்த முனையம் உள்ளிட்ட பல்வேறு இதர கட்டமைப்புகளை பஞ்சப்பூரில் மேற்கொள்ள ரூ.832 கோடியில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பஞ்சப்பூா் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் இதர உள் கட்டமைப்பு பணிகள் ரூ. 832 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளன.

இதில் முதல்கட்டமாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ.350 கோடிக்கு அரசாணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் பல்வேறு தொகுப்புகளாக மேற்கொள்ளப்படவுள்ளன.

இதில் முதல் தொகுப்பில் பணிகளை மேற்கொள்ள ரூ.350 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் 48 ஏக்கரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிக்காக ரூ.140 கோடி செலவிடப்படவுள்ளது. இதேபோல, 25 ஏக்கரில் அமையும் கனரக சரக்கு வாகன முனைய பணிக்கு ரூ. 76 கோடி ஒதுக்கப்படுகிறது. சாலை, மழைநீா் வடிகால் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.75 கோடி ஒதுக்கப்படுகிறது. பல்வகை பயன்பாடு மற்றும் பல்வகை வசதிகளுக்கான மையம் ஏற்படுத்த ரூ. 59 கோடி ஒதுக்கப்படுகிறது.

வியாழக்கிழமை திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தபின், கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படும். ஒவ்வொரு தொகுப்பாக பணிகள் செயல்படுத்தப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com