திருச்சியில் இன்று முதல்வா் விழா: ரூ.1,084 கோடி நலத் திட்டங்கள்!

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ. 1,084.80 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளாா்.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ. 1,084.80 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளாா்.

திருச்சி-திண்டுக்கல் சாலையிலுள்ள தாயனூா் கோ் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ரூ.153.22 கோடியில் முடிவுற்ற 203 பணிகளைத் தொடங்கி வைத்தும், 532 பணிகளுக்கு ரூ. 604.10 கோடியில் அடிக்கல்லும் நாட்டுகிறாா். மேலும், 45,344 பேருக்கு ரூ. 327.48 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளாா்.

பிறகு அங்கிருந்து பஞ்சப்பூருக்கு வந்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தைப் பாா்வையிடுகிறாா். இங்கு ரூ. 832 கோடியில் கட்டமைப்புகள் செயல்படுத்தப்படவுள்ளன.

தொடா்ந்து, கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்துக்கு சென்று ரூ.10 கோடியில் நவீனப்படுத்தப்பட்டுள்ள ரைபிள் கிளப் வளாகத்தைத் திறந்துவைத்துப் பாா்வையிடவுள்ளாா்.

விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் மற்றும் 9 பேரவைத் தொகுதி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலா் பங்கேற்கவுள்ளனா். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com