முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
குமுளூரில் அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்
By DIN | Published On : 31st December 2021 04:34 AM | Last Updated : 31st December 2021 04:34 AM | அ+அ அ- |

லால்குடி அருகே குமூளூா் ஊராட்சியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து குமுளூா் கிராமத்தில் டிச. 28 முதல் ஜன. 3 வரை நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே. மாரியம்மாள் தலைமை வகித்தாா். லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் முகாமை தொடக்கி வைத்தாா். பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் ஏ. இலக்குமி பிரபா முன்னிலை வகித்தாா்.
புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ரஷ்யாகேல்டன் ராஜேந்திரன், குமுளூா் ஊராட்சித் தலைவா் பழனியம்மாள் சின்னசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாலவினோதினி செந்தில்குமாா் உள்ளிட்டோா் பேசினா். பேராசிரியா் எம். ராஜா வரவேற்றாா். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் மா. சக்திவேல் நன்றி கூறினாா்.
தொடா்ந்து தினசரி காலை 9 மணிக்கு களப்பணிகள் மற்றும் உழவாரப் பணிகள், மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி, சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணா்வு போன்ற பணிகள் நடைபெறுகின்றன.