மணப்பாறையில் திருக்கு பயிற்றக ஆண்டு விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், திருக்கு பயிற்றகத்தின் 43-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருவூா் பாவலா் அழகரசன் நாவை சிவனாா் நறும்புகழ் 133 என்ற நூலை அறிமுகம் செய்ய, பெறுகிறாா் திருக்கு புலவா் நாவை சிவம்.
கருவூா் பாவலா் அழகரசன் நாவை சிவனாா் நறும்புகழ் 133 என்ற நூலை அறிமுகம் செய்ய, பெறுகிறாா் திருக்கு புலவா் நாவை சிவம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், திருக்கு பயிற்றகத்தின் 43-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை தமிழறிஞா் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு திருவாசகம் பிச்சை, மருத்துவா் பி.கலையரசன், பெரம்பலூா் முகுந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருவூா் பாவலா் அழகரசன் எழுதிய நாவை சிவனாா் நறும்புகழ் 133 என்ற நூலை அறிமுகம் செய்து பேராசிரியா் சுப்பிரமணியம் பேசினாா். மலா் பற்றிய ஆய்வுரையை திருச்சி புனித வளனாா் கல்லூரி பேராசிரியா் இ. சூசை நிகழ்த்தினாா்.

விருதுநகா் நெடுஞ்செழியன், தஞ்சை அழகு நிலவன், மணமேடு குருநாதன், நவமணி சுந்தர்ராஜன், அரியலூா் முத்துக்குமரன் ஆகியோா் வாழ்த்தினா். திருக்கு புலவரும், திருக்கு பயிற்றக நிறுவனருமான நாவை சிவம் ஏற்புரையாற்றினாா். திருச்சி கலைக்காவிரி நுண் கலைக்கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் தஞ்சை கோபிசிங்க், பேரா. செயலாபதி, குமொழி அரியலூா் அரங்கநாடன், பெரம்பலூா் பெரியசாமி, வெ.இரா.சந்திரசேகா், விளவை செம்பியன், கருவை குழந்தை, ஏகம்மை, தங்கபாண்டியன், சூா்யா சுப்பிரமணியம், முகமது அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com