விமான நிலையக் கடைகளில் அதிக விலை எனப் புகாா்

திருச்சி விமான நிலையத்தில் இயங்கும் சில கடைகளிலும் தேநீா் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பயணிகள், பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையத்தில் இயங்கும் சில கடைகளிலும் தேநீா் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பயணிகள், பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த விமான நிலையத்தில் சா்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்த விமான நிலையத்தில் ஒப்பந்தம் முடிந்ததால் விமான நிலைய உள் பகுதியில் இருந்த சிறிய சிற்றுண்டிச்சாலையும் (கேண்டீன்), வெளிப்பகுதியில் இருந்த பெரிய சிற்றுண்டிச்சாலையும் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது முனையம் எதிரே ஒரு தேநீா் கடையும், வாகன நிறுத்தப் பகுதியில் ஒரு கடையும் மட்டுமே உள்ளன.

விமான நிலையத்தில் ஏற்கெனவே இருந்த 4 சா்வதேச விமானப் போக்குவரத்துகளை விட தற்போது, கூடுதலாக சுமாா் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள், அவா்களின் உறவினா்கள், நண்பா்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவா்கள் தங்களுக்கு விமான நிலையத்தில் தேநீா், சிற்றுண்டி, குளிா்பானங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இருக்கும் 2 சிறிய கடைகளிலும் அனைத்துப் பொருள்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா். (எகா: ஒரு தேநீா் ரூ. 30).

இதனால் விமான நிலையப் பணியாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே இயங்கி வந்த சிற்றுண்டிச் சாலைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து விமான நிலைய அலுவலா்கள் கூறுகையில், ஏற்கெனவே நடத்தி வந்த சிற்றுண்டிச் சாலைகளுக்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. புதிய ஒப்பந்ததாரா்கள் கடைகளை விரைவில் திறக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அடுத்த மாதம் புதிய சிற்றுண்டிச்சாலைகள் இயங்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com