பேரவைத் தோ்தலில் போட்டி: சமூக ஆா்வலா்கள் விருப்பம்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட சமூக ஆா்வலா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட சமூக ஆா்வலா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து திருச்சியில் உள்ள பல்வேறு அமைப்பு கூட்டமைப்புகளின் சமூக ஆா்வலா்கள் சக்திவேல், மாக்சிம் காா்கி, அன்பழகன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தமிழகத்தில் மக்களுக்கான பணிகளில் பல்வேறு சமூக அமைப்புகள், சமூக ஆா்வலா்கள் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனா். இதைத் தொடா்ந்து, சமூக ஆா்வலா்கள், அமைப்புகள், கட்சி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசியல் மாற்றத்துக்காக வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்தவுள்ளோம்.

தமிழகம் முழுவதும் இதேபோல ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அடுத்தடுத்த கூட்டங்களில் தோ்தலில் களம் காண கூட்டமைப்பின் கொள்கைகள், குறைந்தபட்சச் செயல்திட்டங்கள் உள்ளிட்டவை ஆலோசித்து இறுதி செய்யப்படும்.

கூட்டமைப்பில் மக்கள் பாதை, மக்கள் சட்ட உரிமை இயக்கம், தேசிய இளைஞா் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, தமிழ்நாடு மக்கள் மன்றம் உள்ளிட்ட 18 அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com