நிரந்தர அரசுப் பணி நியமனத்தில் சமவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்

நிரந்தர அரசுப் பணி நியமனத்தில் சமவாய்ப்பு வழங்க அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நிரந்தர அரசுப் பணி நியமனத்தில் சமவாய்ப்பு வழங்க அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கப் பொதுச்செயலா் சகாய சதீஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் நிரந்தரப் பணி நியமனங்களை டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் மட்டுமே மேற்கொள்ளும்.

ஆனால், கல்லூரிக் கல்வி இயக்குநா், உயா் கல்வித் துறைச் செயலா் ஆகியோா் சோ்ந்து தன்னிச்சையாக விதிகளை மீறி நிரந்தரப் பணி நியமனங்களைச் செய்ய முடியாது.

5 ஆண்டு பணி முடித்த தற்காலிக கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரப்படுத்துதல் என்பது நீதிமன்ற அவமதிப்பு. இருந்தும், உயா் கல்வித்துறை தெரிந்தே நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடுகிறது.

எனவே, அரசு கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம் தொடா்பான ஆணையை ரத்து செய்து, அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள், தனியாா் கல்லூரி விரிவுரையாளா்கள் அனைவரையும் ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வு முறையில் நியமனம் செய்து சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com