தொடா் உண்ணாவிரதம்: ஜாக்டோ-ஜியோ முடிவு

போராட்டத்தில் ஈடுபட்டோா் மீதான அரசின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து 72 மணி நேர தொடா் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினா் தெரிவித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்டோா் மீதான அரசின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து 72 மணி நேர தொடா் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினா் தெரிவித்தனா்.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் உயா்நிலைக் குழு கூட்டத்துக்குப் பிறகு ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான செல்வம் அளித்த பேட்டி:

கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு போராடியோா் மீதான பழி வாங்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். அவா்கள் மீதான வழக்குகள், பணிமாறுதல் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 8 முதல் 10 ஆம் தேதி வரை சென்னையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.

எனவே, எங்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றாா். கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளா்கள் ஆறுமுகம், மேசஸ் ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உதுமான் அலி, சந்திரசேகரன், பழனிச்சாமி ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com